Sunday, February 28, 2010

110வதுஆண்டு விழா







நமது பள்ளியின் 110வது ஆண்டு விழாவானது 26-10-௨௦௧௦ வெள்ளிக் கிழமையன்று நடைபெற்றது. இவ்விழாவில் தலைமையுரையை பள்ளியின் தாளாளர் திரு J.R. இராமமூர்த்தி அவர்கள் நிகழ்த்தினார். ஆண்டறிக்கை தலைமையாசிரியர் திரு. கே. இராஜேந்திரன் அவர்கள் வாசித்தார். ஆண்டு மலரினை திரு J.R. இராமமூர்த்தி அவர்கள் வெளியிட அதனை பட்டதாரி உதவித்தலைமையாசிரியர் திரு.ஆர். இராமநாதன், இடைநிலை உதவித்தலைமையாசிரியர் திரு. சி. சரவணன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். சிறப்பு விருந்தினர் ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் டாக்டர் திரு. பி. சங்கரராமன் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தி ஆண்டுத்தேர்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், விளையாட்டுத்துறையில் சாதனைகளை புரிந்த மாணவ, மாணவிகளுக்கும், ஆண்டு விழா போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கும் பரிசுகளை வழங்கி சிறப்பித்தார். விழாவிற்கு ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள் திரு. கே.வி. நடராஜன் ஐயா அவர்களும், Er. திரு. கோபாலன் அவர்களும் வந்திருந்து விழாவினை சிறப்பித்தனர்.






விழாவில் பல்வேறு பத்திரிகை அன்பர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் ஆகியோர் வந்திருந்தனர். இறுதியில் முதுகலை உதவித்தலைமையாசிரியர் திரு. கே. பத்மனாபன் அவர்கள் நன்றியுரை நவில நாட்டுப்பண்னுடன் விழா இனிதே நிறைவுற்றது. இங்கு விழாவின் சில புகைப்படங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன.



நன்றி.



பள்ளிக்காக



கே.கண்ணன்,



கணிப்பொறி ஆசிரியர்



DBTR தேசிய மேல்நிலைப்பள்ளி,



மயிலாடுதுறை.

Wednesday, February 17, 2010

திரு எஸ். ரவிகுமார், M.A., M.Ed.,


நமது பள்ளியின் பொருளியல் முதுகலை ஆசிரியர் திரு எஸ். ரவிகுமார் அவர்கள் 14-02-2010 அன்று ஞாயிற்றுக்கிழமை மாரடைப்பின் காரணமாக இறைவனடி சேர்ந்தார் என்பதை எம்பள்ளி அனைத்து முன்னாள் மாணவர்களுக்கும் நெஞ்சம் வெடித்துவிடும் சோகத்துடன் கூற வேண்டியுள்ளது. அன்னார் நமது பள்ளிக்கு அயராது பாடுபட்டு வந்தவர். ஒரு செயலை எடுத்துக்கொண்டால் அதனை முடித்தே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுபவர். அன்னாரின் ஆத்மா சாந்தியடையவும் இனி வருங்காலத்தில் அவரது குடும்பத்தினர் இப்பெரிய இடியுடன் கூடிய சோகத்தில் இருந்து வெளிவரவும் நாம் அனைவரும் இறைவனை பிரார்த்திப்போம்.

Sunday, August 9, 2009

தினத்தந்தி பரிசளிப்புவிழா-டி.பி.டி.ஆர்.




தினத்தந்தியின் பரிசளிப்பு விழா


நமது பள்ளியில் தினத்தந்தியின் சார்பில் பத்தாம் வகுப்பில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. இவ்விழாவில் நாகை கலெக்டர், சப் கலெக்டர், நாகை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள், மயிலாடுதுறை கல்வி மாவட்ட அலுவலர் அவர்கள், நமது பள்ளியின் தாளாளர் அவர்கள், தலைமை ஆசிரியர், ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் மற்றும் மாணவர்கள் மற்றும் தினத்தந்தியின் தஞ்சை பதிப்பின் எடிட்டர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நமது பள்ளியின் மாணவர் இராஜகோபால் பத்தாம் வகுப்பில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றார்.

Thursday, August 6, 2009

சந்திராயன் கருத்தரங்கம்-டி.பி.டி.ஆர்.



கருத்தரங்கம்


நமது பள்ளியில் 04 - 08 - 2009 அன்று கல்வி மாவட்ட அளவிலான ஒரு கருத்தரங்கம் சந்திராயனை பற்றி நடைபெற்றது. அவை அனைத்தும் பவர்பாயின்ட் பிரசன்டேஷனை கொண்டு LCD Projector வாயிலாக நடைபெற்றது. அதில் 15 க்கும் மேற்பட்ட பள்ளிகள் கலந்துகொண்டன. வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Thursday, July 16, 2009

டி.பி.டி.ஆர்.தேசியமேல்நிலைப்பள்ளி-மயிலாடுதுறை

நமது பள்ளியானது 1900 ல் தொடங்கி இன்று வரை சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. பள்ளியானது மாநிலத்தில் நடைபெறும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் பலமுறை முதலிடம் பெற்று அனைவரும் போற்றும் வகையில் செவ்வனே நடைபெற்று வருகிறது. கல்வியைப்போன்றே விளையாட்டுத்துறையிலும் இந்திய அளவிலும் மாநிலம் மற்றும் மாவட்ட அளவிலும் பலமுறை முதல் இடங்களை பெற்று சிறப்பான சாதனைகளை புரிந்து வருகிறது. அனைத்து விதமான பொது அறிவுப் போட்டிகள், கலை, இலக்கியம், பேச்சுப்போட்டி, மற்றும் கட்டுரைப்போட்டிகளிலும் மாநிலம் மற்றும் மாவட்ட அளவுகளில் எம்பள்ளி முதன்மை இடங்களை பெற்று வருகின்றது.

D.B.T.R. NATIONAL HIGHER SECONDARY SCHOOL,
MAYILADUTHURAI,
NAGAPATTINAM DISTRICT,
TAMILNADU,
INDIA.