Wednesday, February 17, 2010

திரு எஸ். ரவிகுமார், M.A., M.Ed.,


நமது பள்ளியின் பொருளியல் முதுகலை ஆசிரியர் திரு எஸ். ரவிகுமார் அவர்கள் 14-02-2010 அன்று ஞாயிற்றுக்கிழமை மாரடைப்பின் காரணமாக இறைவனடி சேர்ந்தார் என்பதை எம்பள்ளி அனைத்து முன்னாள் மாணவர்களுக்கும் நெஞ்சம் வெடித்துவிடும் சோகத்துடன் கூற வேண்டியுள்ளது. அன்னார் நமது பள்ளிக்கு அயராது பாடுபட்டு வந்தவர். ஒரு செயலை எடுத்துக்கொண்டால் அதனை முடித்தே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுபவர். அன்னாரின் ஆத்மா சாந்தியடையவும் இனி வருங்காலத்தில் அவரது குடும்பத்தினர் இப்பெரிய இடியுடன் கூடிய சோகத்தில் இருந்து வெளிவரவும் நாம் அனைவரும் இறைவனை பிரார்த்திப்போம்.

2 comments:

  1. அவருக்கும் அவர் குடும்பத்தினருக்கும் அபிமான மாணவ மனைவிகளுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    http://kgjawarlal.wordpress.com

    ReplyDelete
  2. பள்ளி குறித்தான இடுகை ஒன்று எனது மேற்சொன்ன வலைப்பதிவில் எழுதப்பட்டுள்ளது.

    K.G.Jawarlal

    ReplyDelete